கவிமேகம்

ஆசையே எழுத்தாக எழுத்தே எண்ணமாக
உருவகமே உவமானமாக கற்பனை தோணியாக
கூக்குரலின் விடியலாக வலிக்கு அருவியாக

புயலின் மலையாக நினைவில் நெருப்பாக
பாலில் நிலவாக கூழின் குளிர்ச்சியாக
கதிரவனின் கதிராக காற்றாற்றிற்கு கிணறாக

சுவையின் பச்சையாக அழுத்தத்தின் ஓட்டமாக
பட்டாம்பூச்சியின் சிமிட்டாக பளிச்சிடும் வெண்மையாக
முகிலின் கருமையாக நெருப்பாகி நீராக

கடிவாளத்தின் கட்டுப்பாடாக லாடத்தின் பாதுகாப்பாக
தாழ்பாளின் திறவாக சாவியின் மறைவிடமாக
நிறத்தில் கூட்டுறவாக பலகையில் எண்ணாக

பிரிவில் நன்றியாக வரவேற்பில் நல்வரவாக
திசையில் திருப்பமாக சப்தத்தில் இடியாக
கண்ணில் கருணையாக பேச்சில் நயமாக



நன்றி
வணக்கம்

உங்கள்
க.ம.

Comments