பூ கனிந்தது

உளறினாள் உதறலை
ஊக்கப்படுத்தினாள் சொக்கலை
வருகிறாள் தூதாக
நிழலும் மறைந்தது - நின்றாள்

மெளனம் கரைகிறது
கண்டகரை மூழ்கியது
காணாத தூரம் எட்டியது
சொப்பனம் பறந்தது - நெருங்கினாள்

ஆசை புரிந்தது
சிரிப்பு பூத்தது
வாசம் தெரியவில்லை
பயம் ஓடியது - அணைத்தாள்

பிரிந்தது காற்றாக
வடிந்தது நீராக
உருகியது பச்சையாக
கறை அழிந்தது - நல்லவள்

உங்கள்
க.ம.

Comments