Multilingual HandWritten Fonts Creation Model

பொருளடக்கம்

அ. முன்னுரை

ஆ. எழுத்துரு

இ. நுனிவிரல் எழுத்து

ஈ. எண் எழுத்து

உ. வர்ண எழுத்து

ஊ. மென்பொருள் பெயர்கள்

எ. துளிக்கதிர்

ஏ. முடிவுரை




அ. முன்னுரை

'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பது பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய குடும்ப

விளக்கு. அவ்வொளி பல வர்ணங்களில் வானவில்லாக 'பெயர்ப் பலகை' முதல் 'கணினி'

வரை கலை கட்டுகிறது.


கணினி என்பது இயந்திரம் அவற்றிற்கு உயிராக, ஆய்தமாக, மெய்யாக மற்றும்

உயிர்மெய்யாக உள்ள மொழியின் சிறந்த பங்களிப்பை எடுத்து இயம்புவது இந்த ஆய்வு

கட்டுரை.


ஆ. எழுத்துரு

'எழுத்துரு' என்றால் என்ன? என்பதை சிந்திப்போம். 'மை' கொண்டு எழுதிய 'கை'

பிறகு பத்து விரல்களால் அவ்வெழுத்தை தட்டச்சு செய்து சீர்ப்படுத்தியது.


எழுத்து உருவம் தட்டச்சுக்கு எப்படி வந்தது?. கலைஞனின் கைகளால் வரைந்த

எழுத்தை தான் 'அச்சு' என்றும் 'எழுத்துரு' என்றும் கூறுகின்றோம்.


இ. நுனிவிரல் எழுத்து


எழுத்துக்கள் 247'யையும் நுனிவிரலில் நினைவில் நிறுத்தி பயன்படுத்த வேண்டும்.

தட்டச்சு இயந்திரம் பயன்படுத்தும் போது ஆறு எழுத்துக்கள் விரல்நுனியில் இருக்க

வேண்டும். இதன் நன்மையாதெனின் எந்தவித எழுத்து சிக்கலும் இல்லாதது.


கணினி பயன்படுத்தும் போது இந்த பாரம் சற்றே குறைகின்றது, அதாவது மூன்று

எழுத்துக்கள் தனித்தனியாக தட்டச்சு செய்ய பழகினால் போதுமானது. அதுவும் உயிர் எழுத்து,

மெய் எழுத்து என்று மட்டும் பழகினால் தட்டச்சு வேகம் எளிமையாகின்றது.


ஈ. எண் எழுத்து


எழுத்துக்களாக உள்ளவை பதிவு செய்யப்படும் போது எண் குறியீடுகளாக ஆகிவிடும்.

காந்த பதிவு அறை, சிகப்வொளி பதிவு அறை அல்லது மின்னணு பதிவு அறை உள்ளது

உள்ளாதது என்பதை '1' மற்றும் '0' என்ற இரண்டு குறியீடுகளாக கொள்ளும்

தன்மையுடையது. இந்த இரண்டு குறியீடுகளாக தான் தகவல்கள் பதிவில் வைக்கின்றோம்,

பிறகு அத்தகவலை பரிமாறிக் கொள்கிறோம்.


"டேசு-16" என்ற குறீயீட்டு முறை 'அ' முதல் 'னௌ' வரை உள்ள எழுத்துக்களுக்கு

'0E20' என்று தொடங்கும் எண் வரிசையை பதிவில் வைக்கின்றது. பதிப்புத்துறைகளில்

இக்குறியீடு அதிகம் பயன்பாட்டில் உள்ளது.


"யுனிகோட்" என்ற பல்மொழி எழுத்துக்களுக்கு உள்ள குறீயீட்டு முறை 'அ' முதல்

'னௌ' வரை உள்ள எழுத்துக்களுக்கு '0B80' என்று தொடங்கும் எண் வரிசையை

பதிவில் வைக்கின்றது. இணையங்களில், மென்பொருள் உற்பத்தியில் இந்த குறியீடு அதிகம்

பயன்படுகின்றது.



உ. வர்ண எழுத்து


தட்டச்சுவில் பயன்படுத்தப்படும் நாடாவின் வர்ணத்திற்கு ஏற்றவாறு அச்சாகும் வர்ணம்

அமையும். பல வர்ண எழுத்துக்கள் இத்தொழில் நுட்பத்தில் கொண்டு வருவது கடினமாகும்.

மென்பொருள் கொண்டு உருவாக்கப்படும் எழுத்துக்களுக்கு தேவைக்கு தகுந்தார் போல்

வர்ணம் தீட்டலாம்.

திரைப்படங்களுக்கு வெளியிடப்படும் சுவரொட்டி மற்றும் பருவ இதழ்களின் வர்ணங்கள்,

வடிவங்கள் பேசிடும் புதியது பற்றி. கற்பனைகளுக்கு தகுந்தார் போல் புத்தம் புது எழுத்துரு

தனித்தன்மையுடன் படைபாற்றலால் உருவாக்கப்படுகின்றது.


ஊ. மென்பொருள் பெயர்கள்


மென்பொருள் என்பது "எண் கணித முறை" என்றால் மிகையாகாது. தற்போது

ஆங்கிலம் தான் கணினி நினைவகத்திற்கு பெயர்களாக பெரும்பாலும் பயன்படுத்தப்

படுகின்றது. அப்பெயர்கள் அனைத்தும் தமிழில் இருந்தால் நம் நினைவிலும் சேர்ந்தே வாழும்

தன்மையை பெரும்.


"புள்ளியையும், கோணத்தையும்" படத்தில் போட்டு கிரேக்க மற்றும் ஆங்கில

மொழிகளுடைய எழுத்துக்கள் கொண்டு குறிப்பிட்டால் தான் புரிந்து கொள்ளும் நிலை

உள்ளது. இந்த உதாரணத்தின் மூலம் நம் மொழியை பயன்படுத்தவது தான் எளிமை பிற

மொழிகளின் உபயோகம் கடினமானது என்பதை ஆய்ந்து அறியவேண்டும்.


எ. துளிக்கதிர்


பளிச்பளிச் நிறம் புதுபுது மணம்

துளிதுளி மகரந்தம் சுறுசுறு தேனி

களிகளி பருமன் பாழ்பாழ் பாசி


சுடுசுடு தூசி மேலமேல காசு

கிடுகிடு மகுடி பறபற ஓசை

ஆடுஆடு மயக்கம் கேள்கேள் மௌனம்


ஏ. முடிவுரை


எண்ணுக்குள் மொழியா மொழிக்குள் எண்ணா என்பதை

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு"

என்கின்ற அய்யனின் குறள் வழி தெளியலாம்.

Comments