வெண்ணிலா என் கண்ணிலா

மினுக்-மினுக் என்று ஓசையின்றி எங்கும் பச்சை வெளிச்சம் பரவியது,ஆம் மின்மினி பூச்சிகள் தான் நமக்கு தந்தது அதை.

வானம் 'நீல நிறம்' என்று சம்பான் கூறினான், இல்லை இல்லை 'கருப்பு நிறம்' என்று பிருக்ரிதி கூறினான்.

மவுனியா உள்ளே வந்து அப்ப அப்பா எப்பொழுதும் முரண்பாடு தானா அதோ பாருங்கள் வெண்ணிலா காய்கிறது அதை ஏன் இரசிக்க தெரியவில்லை.

சம்பான் வியம்பினான் எனது கிழவி கூட கூறினார்கள் அங்கே ஆயா வடை சுட்டு தருகிறது என்று.

பிருக்ரிதி கூறினான் அங்கே இப்பொழுது குடிநீர் உள்ளதாகவும் கண்டுபிடித்து உள்ளார்கள்.

இவர்களின் இனக்கமான பேச்சு மவுனியாவிற்கு புன்னகையை வரவைத்தது, அதை இருவரும் இரசிக்கின்றனர்.

பிருக்ரிதி 'வந்தியா இங்கு' என்று அம்மா கூப்பிட்டார்கள். என்னம்மா? பிறகு வருகிறேனே என்கிறான்.

"எள்ளுன்னா எண்ணெய்யா சீக்கீரம் வரவேண்டாமா". கடைக்கு போய் விளக்கு வாங்கி வா.

ஏம்மா இப்படி அவசரப்படுத்துகிறாய்?.

"எரியுதான்னு பார்க்கனும், மின்சாரம் குறைவா எடுக்கிறதா, நீடித்து உழைக்குதா, விலை குறைவான்னு பார்கனும்" அவ்வளவுதானே.

நாளை கார்திகைக்கு அகல் விளக்கு வேண்டும் புரிந்ததா என்றாள் அம்மா.

சற்றே பிரியா விடை தந்து தன் நடையை தொடர்ந்தான், பிருக்ரிதி .

இப்படிக்கு,
க. மணிகண்டன்

Comments